தொழில்நுட்பம்

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமராவுடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-05-28 09:46 GMT   |   Update On 2019-05-28 09:46 GMT
சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



சியோமியின் ரெட்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி K20 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 124.8 டிகிரி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, சஃபையர் லென்ஸ் கவர் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஏழாம் தலைமுறை ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3P லென்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் கைரேகை இயங்கும் பகுதி 15 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3D வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.



ரெட்மி K20 ப்ரோ சிறப்பம்சங்கள்

- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 1/2″ சோனி IMX586, 0.8μm பிக்சல், 6P லென்ஸ்
- 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4 
- 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5எம்.எம். ஆடியோ ஜாக், குவால்காம் அக்யூஸ்டிக் WCD9340 ஹை-ஃபை ஆடியோ சிப்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளேம் ரெட், கிளேசியர் புளு மற்றும் கார்பன் ஃபைபர் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 2499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.25,200) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.26,220) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,230) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,245) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்ட ரெட்மி K20 ஸ்மார்ட்போனினை சியோமி அறிமுகம் செய்துள்ளது.
Tags:    

Similar News