ஆன்மிகம்
முருகன்

ஆடி கிருத்திகையன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை

Published On 2021-08-01 03:58 GMT   |   Update On 2021-08-01 03:58 GMT
ஆடி கிருத்திகையான நாளை முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி ஜெயராமன் மேற்பார்வையில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆடி கிருத்திகையான நாளை முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், இளையனார்வேலூர் முருகன் கோவில் போன்ற கோவில்களில் அன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அன்றைய தினம் வழக்கம்போல் ஆகம விதிகளின்படி கோவிலில் 3 கால பூஜைகள் நடைபெறும்.

இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர்கள் பரந்தாமகண்ணன், சிந்துமதி, இளங்கோவன், அமுதா, கோவில் மேலாளர்கள் சுரேஷ், ரகு, மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News