செய்திகள்
இறுதிகட்டத்தை எட்டியுள்ள நடை மேம்பாலம்

மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு நடை மேம்பாலம்

Published On 2021-10-26 07:17 GMT   |   Update On 2021-10-26 07:17 GMT
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு இரும்பினாலான நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை:

மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகருக்குள் நுழைபவர்கள் ரங்கநாதன் தெருவையே பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த தெருவில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் அதிகரிப்பதை காண முடியும்.

இதனால் ஜவுளி எடுக்க வருபவர்களும், ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி தி.நகருக்குள் நுழைபவர்களும் திணறும் நிலை ஏற்படுகிறது. இந்த நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு இரும்பினாலான நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தி.நகர் பஸ் நிலையம் அருகில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனால் மேம்பாலம் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. ரூ.27.05 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பாலம் திறக்கப்பட்ட பிறகு மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறுபவர்கள் அதனை அதிகமாக பயன்படுத்துவார்கள். அப்போது ரங்கநாதன் தெருவில் நெரிசல் பெருமளவில் குறைய வாய்ப்பு ஏற்படும்.
Tags:    

Similar News