செய்திகள்
கேஎல் ராகுல் - பண்ட்

பண்ட், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் இங்கிலாந்து அணிக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு - கேஎல் ராகுல் சதம்

Published On 2021-03-26 11:53 GMT   |   Update On 2021-03-26 11:53 GMT
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது.
புனே:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புனேயில் இன்று (26-ந் தேதி) பகல்-இரவு ஆட்டமாக தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான தவான் 4 ரன்னிலும் ரோகித் சர்மா 25 ரன்னிலும் வெளியேறினர். இந்நிலையில் விராட் கோலி ராகுல் ஜோடி சிறப்பாக ஆடினர். விராட் கோலி 66 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த பண்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் அடிக்க மறுமுனையில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ராகுல் சதம் அடித்து அசத்தினார். அவர் 108 ரன்கள் இருக்கும் போது வெளியேறினார். 

இதனையடுத்து பாண்ட்யா, பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடினர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. பண்ட் 77 ரன்னிலும் ஹர்திக் பாண்ட்யா 35 ரன்னிலும் அவுட் ஆனார்கள். குர்ணால் பாண்ட்யா 12 ரன்னிலும் தாகூர் 0 ரன்னிலும் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில்  14 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. இதில் பண்ட் 7 சிக்சரும் ஹர்திக் பாண்ட்யா 4 சிக்சர்களும் விளாசினர்.

இங்கிலாந்து தரப்பில் டாம் கரண், லீஸ் டாப்லே 2  விக்கெட்டும் சாம் கரண், அடில் ரஷித் தலா ஒரு விக்கெட்டுளை வீழ்த்தினர்.
Tags:    

Similar News