ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு மறுவீடு பட்டின பிரவேசம்

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு மறுவீடு பட்டின பிரவேசம்

Published On 2020-11-16 09:40 GMT   |   Update On 2020-11-16 09:40 GMT
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான சுவாமி-அம்பாளுக்கு மறுவீடு பட்டின பிரவேசம் நடந்தது. இதில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பலகாரங்கள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

கடந்த 11-ந் தேதி காட்சி மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம், 12-ந்தேதி அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நிகழ்ச்சியான சுவாமி-அம்பாளுக்கு மறுவீடு பட்டின பிரவேசம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பலகாரங்கள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப்பிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவற்றை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News