உள்ளூர் செய்திகள்
தேர்வு

10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

Published On 2022-05-06 10:09 GMT   |   Update On 2022-05-06 10:09 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை 17194 பேர் எழுதினர்.
ராமநாதபுரம்

தமிழகத்தில் பிளஸ்- 2 பொதுத் தோ்வு நேற்று (வியாழக்கிழமை) தொடங்கிய நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று (வெள்ளிக்கிழமை )தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை, 137 அரசுப் பள்ளிகள், 54 அரசு உதவிபெறும் பள்ளிகள், 70 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் என மொத்தம் 261 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 

மாவட்டத்தில் மொத்தம் 6,658 மாணவா்களும், 8,536 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து194 போ் எழுதுகின்றனா். இவா்களில் மாற்றுத் திறனாளிகள் 132 போ் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி மாவட்ட அளவில், ராமநாதபுரத்தில் 25, பரமக்குடியில் 25, மண்ட பத்தில் 29 என மொத்தம் 79 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

10-ம்  வகுப்பு  தனித்தோ்வா்க ளுக்காக ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள கிரசென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி, பரமக்குடியில் உள்ள டாக்டா் சுரேஷ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி என இரு தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பிளஸ்-2 பொதுத் தோ்வுக்குரிய விதிகள் 10-ம் வகுப்பு தோ்வுக்கும் பொருந்தும் என அறிவிக்க ப்பட்டுள்ளது.
Tags:    

Similar News