தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 8

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன்

Published On 2020-01-03 04:23 GMT   |   Update On 2020-01-03 04:23 GMT
ரெட்மியின் புதிய நோட் 8 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



ரெட்மியின் நோட் 8 ஸ்மார்ட்போன் புதிய வேரியண்ட் விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது. சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமான ரெட்மி நோட் 8 இந்தியாவில் இருமாதங்கள் கழித்தே அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி ஆப்ஷனில் மட்டும் வெளியிடப்பட்டது.

48 எம்.பி. பிரைமரி கேமராவை சேர்த்து நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள், வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

தற்சமயம் சீன வலைதளத்தில் லீக் ஆகியிருக்கும் ரெட்மி நோட் 8 வேரியண்ட் M1908C3JE எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விரைவில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம்.

தற்சமயம் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடலாக 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட் இருக்கிறது. இதன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வேரியண்ட் அறிமுகமாகும் பட்சத்தில் அதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்றே தெரிகிறது. 



புதிய 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வேரியண்ட் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், சீன வலைத்தளத்தில் லீக் ஆகியிருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மூன்லைட் வைட், நெப்டியூன் புளு மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் இந்தியா மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது. 
Tags:    

Similar News