லைஃப்ஸ்டைல்
ஆக்ரா ஸ்பெஷல் ‘பெட்மி’ பூரி

ஆக்ரா ஸ்பெஷல் ‘பெட்மி’ பூரி

Published On 2021-06-25 09:43 GMT   |   Update On 2021-06-25 09:43 GMT
டெல்லி, ஆக்ரா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமான உணவென்றால் அது பெட்மி பூரி தான். மிகவும் சத்து நிறைந்த இந்த பூரிதான் ஆக்ராவாசிகளின் காலை நேர பிரதான உணவு.
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்
ரவை - கால் கப்
முழு உளுந்து - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டேபிள் டீஸ்பூன்
எண்ணெய் பொரிக்க - 2 டேபிள் டீஸ்பூன்

பூரணத்துக்கு

முழு உளுந்து - 1 கப்
ப.மிளகாய் - 2
இஞ்சி  - 1 துண்டு
பெருங்காயம் - சிறிதளவு
சோம்பு தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டேபிள் டீஸ்பூன்
ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் -  1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் -  டேபிள் டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு

செய்முறை

உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

இஞ்சி, ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அதில் ஒரு பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பூரி மாவுக்கான பொருட்களை சேர்த்து பிசைத்து இரண்டு டேபிள் டீஸ்பூன் எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் ஒரு டேபிள் டீஸ்பூன் எண்ணெய் விட்டு மசாலா பொருட்களையும் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி விழுதையும் அத்துடன் சேர்க்கவும். சிறிது வதங்கியபின் மீதமுள்ள உளுந்து விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

உளுந்த நன்றாக வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கி கொண்டே இருக்க வேண்டும். கட்டியில்லாமல் பொடி போன்று உதிரியாக வரும் போது கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

சிறிது ஆறியவுடன் பூரி செய்ய தொடங்க வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவை, சிறிதளவு எடுத்து கப் போன்று செய்து கொள்ள வேண்டும். இதில் பூரணத்தை உள்ளே வைத்து மூடி பூரியாக திரட்டி கொள்ள வேண்டும்.

உருட்டி வைத்துள்ள பூரியை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும். இந்த பூரியை ஆலு சப்ஜியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
Tags:    

Similar News