செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பேனர் வழக்கு- அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

Published On 2019-10-10 09:00 GMT   |   Update On 2019-10-10 09:30 GMT
பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு இளம்பெண் பலியானது தொடர்பான வழக்கில் அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 2-ம் தேதி சாலையின் நடுவில் உள்ள பேனர் விழுந்ததால் விபத்து ஏற்பட்டு இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்ட ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளனர்.

நீதிபதி புகழேந்தி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:    

Similar News