ஆன்மிகம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்

அவிநாசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வேண்டுகோள்

Published On 2021-08-13 06:01 GMT   |   Update On 2021-08-13 06:01 GMT
கடந்த 1968-ம் ஆண்டு முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில் பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது.
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அவிநாசி வாழ் பக்தர்கள் மற்றும் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் மிராசு மற்று பக்தர்கள் சார்பில் கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் மனு வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 1968-ம் ஆண்டு முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில் பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில் மற்றும் உபகோவில்களான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவில், ஆகாசராயர் கோவில் ஆகிய கோவில்களில் திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டு வந்தது.

தற்போது கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டதால் தங்கள் தலைமையில் அறநெறிகளின்படி பக்தர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அறநிலையத்துறை மூலம் அனுமதி பெற்று, கும்பாபிஷேக விழாவை நடத்தி தர வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News