தொழில்நுட்பம்

ஏசர் ஸ்பின் 3 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

Published On 2017-02-16 13:50 GMT   |   Update On 2017-02-16 13:50 GMT
ஏசர் நிறுவனம் தனது ஸ்பின் ரக லேப்டாப்களில் புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி ஏசர் ஸ்பின் 3 லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதுடெல்லி:

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஏசர் ஸ்பின் 3 லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டூ-இன்-ஒன் ரக கன்வெர்டிபிள் லேப்டாப்கள் இந்தியாவில் அனைத்து வர்த்தகர்களிடமும் விற்பனைக்கு வந்துள்ளது. 15.6 இன்ச் 768x1366 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே IPS வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.42,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i3 பிராசஸர், 4ஜிபி ரேம் மற்றும் 500ஜிபி ஹார்டு டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 10 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த லேப்டாப்பில் வசதியாக டைப் செய்ய ஏதுவாக 1.6 எம்எம் கீஸ்டிரோக் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.   

யுஎஸ்பி 3.1 டைப்-சி போர்ட் கொண்டுள்ள ஏசர் ஸ்பின் 3 லேப்டாப் மூலம் தரவுகளை வேகமாக டிரான்ஸ்ஃபெர் செய்யும் வசதி, கூடுதல் டிஸ்ப்ளேவுடன் இணைக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டால்பி ஆடியோ வசதியும், எச்டி தரம் கொண்ட வெப்கேமரா, வை-பை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.  

ஏசர் ஸ்பின் 3 லேப்டாப்பினை மூன்று விதமாக பயன்படுத்த முடியும். அதன் படி லேப்டாப், டேப்லெட், டிஸ்ப்ளே மற்றும் டென்ட் என வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஏசர் ஸ்பின் 3 லேப்டாப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News