உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு விருது

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு விருது

Published On 2022-04-15 18:51 GMT   |   Update On 2022-04-15 18:51 GMT
புதுச்சேரி பல்கலைக்கழக திட்டத்தின் மூலம் மத்திய அமைச்சகங்களின் அத்தியாவசிய தேவைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுவை:

புதுச்சேரி பல்கலைக்கழகம், துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் தலைமையில்,கடந்த 4 ஆண்டுகளாக பசுமை வளாகம் (கிரீன் கேம்பஸ்) திட்டத்தின் கீழ்  நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. 

இந்தத் திட்டங்கள் மூலமாக கல்வி அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் போன்ற அமைச்சகங்களின் அத்தியாவசிய தேவைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த முன்னோடி முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி மன்றம், மத்திய உயர்கல்வித்துறை, கல்வி அமைச்சகம்,  2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கி புதுவை பல்கலைக்கழகத்தை அங்கீகரித்துள்ளது. 

சிறப்புமிக்க இவ்விருதை மாவட்ட ஆட்சியர்  இ.வல்லவன், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மு. மகேஷ், உதவிப்பதிவாளர் மற்றும் முனைவர். ஆ.நந்தி வர்மன் ஆகியோரிடம் வழங்கினார். 

இவ்விருது புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அவரது
அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டதாக பல்கலைக்கழகத்தின் உதவிப்பதிவாளர் கே. மகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News