உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

முதல் தவணை தடுப்பூசி - திருப்பூரில் 95 சதவீதத்தை நெருங்கியது

Published On 2022-01-11 07:13 GMT   |   Update On 2022-01-11 07:13 GMT
மாவட்டத்தில் 32 லட்சத்து 95 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 17 லட்சத்து 9 ஆயிரத்து 195 ஆண்கள், 15 லட்சத்து 85 ஆயிரத்து 355 பெண்கள் என 32 லட்சத்து 95 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக கோவிஷீல்டு தடுப்பூசியை 28 லட்சத்து 80 ஆயிரத்து 838 பேரும், கோவேக்ஷின் தடுப்பூசியை 4 லட்சத்து 10 ஆயிரத்து 802 பேரும் செலுத்தியுள்ளனர்.

முதல் தவணை தடுப்பூசியை 13.78 லட்சம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 13.16 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 60 வயதை கடந்தவர்கள் 4.21 லட்சம் பேருக்கும், 45 வயதை கடந்த 7.99 லட்சம் பேருக்கும், 18 வயதை கடந்த  20.15 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

மாவட்டத்தில் 32 லட்சத்து 95 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நடப்பு வாரத்தில் இது 33 லட்சத்தை எட்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை 95 சதவீதத்தை நெருங்கியுள்ளது.

ஆனால் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை 60 சதவீதத்தை கூட எட்டவில்லை. காலக்கெடு முடிந்தும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து வார்டு வாரியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்றனர்.
Tags:    

Similar News