ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன் டி ராக்

சோதனையில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் டி ராக்

Published On 2019-11-28 11:27 GMT   |   Update On 2019-11-28 11:27 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் டி ராக் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடல் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய டி ராக் கார் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் கார் ஜீப் காம்பஸ், கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா கரோக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.



புதிய ஸ்பை படங்களில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்.யு.வி. முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. எனினும், காரின் முன்புறம் மெல்லிய கிரில், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் பிரம்மாண்ட பம்ப்பர்கள், பெரிய மெஷ் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

முன்புற பம்ப்பரில் பெரிய ஏர்-இன்டேக், சில்வர் ஸ்கிட் பிளேட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் இன்டிகேட்டர் போன்று இயங்குகின்றன. காரின் பக்கவாட்டில் கூர்மையான கிரீஸ்களும், பெரிய வீல் ஆர்ச்களும் காணப்படுகிறது. டி ராக் கார் டூயல் டோன் நிறம் கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் ஸ்போர்ட் தீம், மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர், 7-ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

புகைப்படம் நன்றி: Team-BHP
Tags:    

Similar News