உள்ளூர் செய்திகள்
சென்னிமலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்.

அரசு பஸ் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சுவலி

Published On 2022-04-16 07:21 GMT   |   Update On 2022-04-16 07:21 GMT
ஈரோடு-சென்னிமலை இடையே இயக்கப்பட்டு வரும் 11-ம் நெம்பர் கொண்ட அரசு டவுன் பஸ் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னிமலை:

ஈரோடு-சென்னிமலை இடையே இயக்கப்பட்டு வரும் 11-ம் நெம்பர் கொண்ட அரசு டவுன் பஸ் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு-சென்னிமலை இடையே இயக்கப்பட்டு வரும் 11-ம் நெம்பர் கொண்ட அரசு டவுன் பஸ் ஈரோட்டில் இருந்து கடைசியாக இரவு 10 மணிக்கு மேல் சென்னி மலைக்கு வந்து சேரும்.

பின்னர் அந்த பஸ் சென்னிமலை யூனியன் அலுவலகம் முன்பு நிறுத்தப் பட்டு மறுநாள் அதிகாலை 5:40 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஈரோட்டுக்கு செல்லுவது வழக்கம்.

சம்பவத்தன்று இரவு ஈரோட்டில் இருந்து சென்னி மலைக்கு வந்த அந்த பஸ் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நிறுத்தப் பட்டு பஸ் டிரைவரும், கண்டக்டரும் ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் அதிகாலை சென்னிமலை பஸ் நிலையத்துக்கு பஸ்சை எடுத்துவர தயாரானார்கள்.

அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் லோகநாதன் (50)என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்கி கொண்டே பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அங்கு பயணிகளை ஏற்றுவ தற்காக பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. நெஞ்சு வலி அதிகமானதால் கண்டக்டர் லோகநாதன்  மிகவும் சிரமப்பட்டார்.

இதை கண்ட பஸ்சில் இருந்த பயணிகள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்தினார்கள். 

தொடர்ந்து பஸ்சின் டிரைவர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால் அந்த பஸ் சென்னிமலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னர் மதியத்திற்கு மேல் மாற்று கண்டக்டர் வந்த பின்பு பஸ் இயக்கப்பட்டது.
Tags:    

Similar News