செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஓராண்டு வரை தரிசனத்திற்கு வர அனுமதி

Published On 2021-06-07 10:30 GMT   |   Update On 2021-06-07 10:30 GMT
திருப்பதியில் நேற்று 12,874 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 4962 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.88 லட்சம் உண்டியல் வசூலானது.
திருப்பதி:

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு வரை தரிசன வாய்ப்பை வழங்கியுள்ளது.

கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு வருகின்றனர். நாடு முழுவது பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருப்பதிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தேவஸ்தானம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தரிசனம் செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கி உள்ளது.

இந்த வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் நேற்று 12,874 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 4962 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.88 லட்சம் உண்டியல் வசூலானது.

திருப்பதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

சூறை காற்று வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து சாலையில் விழுந்து கிடந்தது.
Tags:    

Similar News