செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

Published On 2019-03-31 08:42 GMT   |   Update On 2019-03-31 08:42 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் லுங்கி நிகிடிக்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலெஜினை தனது அணியில் சேர்த்துள்ளது. #IPL #IPL2019 #CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி இடம் பிடித்திருந்தார். இலங்கைக்கு எதிரான தொடரின்போது இவர் காயம் அடைந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்யாமல் இருந்தது.

இதற்கிடையே சொந்த காரணத்திற்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே அணியில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலெஜினை தனது அணியில் சேர்த்துள்ளது.
Tags:    

Similar News