தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் நார்டு

ஆண்ட்ராய்டு அப்டேட்டை திடீரென நிறுத்திய ஒன்பிளஸ்

Published On 2021-03-12 11:47 GMT   |   Update On 2021-03-12 11:47 GMT
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்ட புது ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.


ஒன்பிளஸ் நார்டு மாடலில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. புது அப்டேட் பல்வேறு பிழைகளை கொண்டிருப்பதால் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மார்ச் மாத துவக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கியது. 



புது அப்டேட் ஏற்படுத்தும் பிழைகள் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், பலர் செயலிகள் கிராஷ் ஆவதாக ஒன்பிளஸ் போரம்களில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவை முதல் ஒபன் பீட்டாவில் ஏற்படாமல், தற்போதைய ஆக்சிஜன் ஒஎஸ் 11 பதிப்பில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

பிழை ஏற்படுவதால், புது ஒஎஸ் வெளியீட்டை ஒன்பிளஸ் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. பிழைகள் சரி செய்யப்பட்டு விரைவில் புது அப்டேட் மிக விரைவில் வெளியிடுவதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News