செய்திகள்
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்

கர்நாடக சபாநாயகர் முடிவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Published On 2019-08-01 12:53 GMT   |   Update On 2019-08-01 12:53 GMT
கர்நாடகாவில் நடைபெற்ற அரசியல் குழப்பத்திற்குப் பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 14 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்.ஏல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

கொறடா உத்தரவிட்டும் சட்டசபை வாக்கெடுப்பில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 14 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று அவர்கள் 14 பேரும் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவர்கள் ராஜினாமாவால் எடியூரப்பா மீண்டும் கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News