செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை திடீர் உயர்வு

Published On 2021-05-19 08:41 GMT   |   Update On 2021-05-19 08:41 GMT
ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் விலை அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 320 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது.

வரத்து குறைவு காரணமாக பீன்ஸ், அவரைக்காய், கேரட், முருங்கைக்காய், பச்சை மிளகாய் விலை திடீரென அதிகரித்து உள்ளது.

கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.5-க்கு விற்ற தக்காளி ரூ.10க்கும், ரூ.20-க்கு விற்ற கேரட் ரூ.40-க்கும், ரூ.20-க்கு விற்ற அவரைக்காய் ரூ.40-க்கும், ரூ.10-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.60க்கும், ரூ.6-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.25-க்கும், ரூ.7-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் விலை அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:

முழு ஊரடங்கு மற்றும் நேரக்கட்டுப்பாடு காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்றைய காய்கறி மொத்த விலை நிலவரம் வருமாறு:-

தக்காளி- ரூ.10, வெங்காயம்-ரூ.15, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.20, உஜாலா கத்தரிக்காய்- ரூ.15, வரி கத்தரிக்காய்-ரூ.12, அவரைக்காய்-ரூ.40, வெண்டைக்காய்- ரூ.25, பச்சை மிளகாய்- ரூ.40, ஊட்டி கேரட்- ரூ.40, முருங்கைக்காய்-ரூ.60, பீன்ஸ்-ரூ.60, பீட்ரூட்-ரூ.20, கோவக்காய்-ரூ.15 , பாகற்காய்- ரூ.20, முள்ளங்கி -ரூ.10, நூக்கல் -.ரூ15, சவ்சவ் -ரூ.15, வெள்ளரிக்காய் -.ரூ20, பூசணிக்காய் -ரூ.3, பரங்கிக்காய் -ரூ.3, முட்டை கோஸ் -.ரூ5, காலிபிளவர் ஒன்று- ரூ.10, இஞ்சி- ரூ.55.
Tags:    

Similar News