ஆன்மிகம்
மகாலட்சுமி

மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபட உகந்த நேரம்

Published On 2020-08-28 07:33 GMT   |   Update On 2020-08-28 07:33 GMT
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. மகாலட்சுமிக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நேரம் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலையிலும், மாலையிலும் விளக்கேற்ற வேண்டும். சுவாமி மாடத்துக்கு முன்பும், வாசல் மாடத்திலும் விளக்கேற்றுவது நல்லது. காலையில் விளக்கேற்ற முடியாதவர்கள் மாலையில் 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள்ளாக சுவாமி படத்துக்கு விளக்கேற்ற வேண்டும்.
அதிகாலையில் வீட்டின் முன்புறம், பின்புறம் சாணம் தெளிக்க வேண்டும்.

பின்புறமாக மூதேவி வெளியேறவும், முன்புறமாக லட்சுமி (ஸ்ரீதேவி) வீட்டுக்குள் வரவும் இப்படிச் சாணம் தெளிக்க வேண்டும். தெளிப்பதற்கு பசுஞ்சாணத்தையே உபயோகிக்க வேண்டும். கன்றுக் குட்டி போட்டுள்ள பசுவின் சாணத்தையே தெளிக்க உபயோகிக்க வேண்டும். அந்தப் பசு சாணம் போடும் போது சாணம் பூமியில் விழுவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் பிடித்து அதைக் கொண்டே சாணம் தெளிக்க வேண்டும். அல்லது சாணம் கிடைக்காவிட்டால், பூமியில் சாணம் விழுந்து விட்டால் அதன் மேற்புறத்தை ஒதுக்கி விட்டு, நடுப்பக்கத்தில் இறுகாமல் இருக்கும் சாணத்தை மட்டும் கொண்டு வந்து கரைத்துத் தெளிக்க வேண்டும்.

மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.

லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை, பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
Tags:    

Similar News