ஆன்மிகம்
திருவண்ணாமலை

ஜோதியை தரிசிக்கும் ஒரே ஸ்தலம் திருவண்ணாமலை

Published On 2020-12-07 08:51 GMT   |   Update On 2020-12-07 08:51 GMT
தேவார திருப்பதிகங்கள் பெற்ற நடு நாட்டுத் தலங்களுள் 22-வது தலம் திருவண்ணாமலை தலமாகும். திருவண்ணாமலை பெரிய கோவில் நகரம்.
தேவார திருப்பதிகங்கள் பெற்ற நடு நாட்டுத் தலங்களுள் 22-வது தலம் திருவண்ணாமலை தலமாகும். திருவண்ணாமலை பெரிய கோவில் நகரம்.

சமய உலகில் புகழ் பெற்ற திருத்தலங்களில் திருவண்ணாமலை தலமும் ஒன்று. பஞ்ச பூத தலங்களில் இது தேயுத்தலமாகவும் விளங்குகிறது. முக்தி தலங்கள் நான்கினில் நினைக்க முக்தி தருவது திருவண்ணாமலை தலமாகும்.

இத்தலத்தில் சிவபெருமான் உமையம்மையாருக்கு இடப்பாகம் அளித்த சிறப்பும் உண்டு. திருஞான சம்பந்தர், திருநாவுக் கரசர் அருளிய 5 தேவாரத் திருப்பதிகங்களும், சுந்தரர், மாணிக்க வாசகர், அருணகிரி நாதர் முதலியோர் அருளிய தனிப்பாடல்கள் பதிகங்கள் பிரபந்தங்கள் முதலியனவும் இத்தலத்தில் உள்ளன. சூரியன், சந்திரன், பிரதத்தராசன், அஷ்ட வசுக்கள், பிரம்மதேவன், திருமால், புலிகா திபன் முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது. தென் இந்தியர் மட்டுமல்ல. வட இந்திய மக்கள் பலரும் யாத்திரையாக வந்து வழிபடும் சிறப்பை பெற்றதுடன் பெருமை பெற்று விளங்குகிறது இத்தலம்.
Tags:    

Similar News