செய்திகள்
எத்தியோப்பியா, விமானம்

போர் ஆயுதங்களை கொண்டுசெல்ல வணிக விமானநிறுவனத்தை பயன்படுத்திய எத்தியோப்பியா

Published On 2021-10-07 22:30 GMT   |   Update On 2021-10-07 22:30 GMT
உலகின் முன்னணி விமானப் போக்குவரத்தின் ஒரு குழுவான ஸ்டார் அலையன்சின் உறுப்பினர் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் ஆகும்.
அடிஸ் அபாபா:

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அரசுக்கு சொந்தமானது. ஆப்பிரிக்க கண்டம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நகரங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு பில்லியன் கணக்கிலான டாலர்கள் வருமானம் கிடைக்கிறது. 

இந்நிலையில், எத்தியோப்பிய நாட்டின் வணிக விமான நிறுவனத்தை போர் ஆயுதங்களைக் கொண்டு செல்ல அந்நாட்டு அரசு பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

அடிஸ் அபாபாவின் சர்வதேச விமான நிலையம் மற்றும் எரித்திரிய நகரங்களான அஸ்மாரா மற்றும் மசாவாவில் உள்ள விமான நிலையங்களுக்கு இடையே கடந்த ஆண்டு நவம்பரில் பல எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டன.

போரின்போது முன்னாள் எதிரிகளுக்கு இடையிலான இந்த ஆயுத வர்த்தகம் ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. 

ஆனால், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறோம். எந்தவொரு விமானத்திலும் எந்தவொரு போர் ஆயுதத்தையும் கொண்டு செல்லவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News