ஆட்டோமொபைல்
கோப்புப்படம்

வாகன இன்சூரன்ஸ் - இத்தனை விஷயம் உள்ளதா?

Published On 2020-11-07 10:46 GMT   |   Update On 2020-11-07 10:46 GMT
வாகன இன்சூரன்ஸ் நடைமுறை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


அவசர உலகில் வாகனங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், கார் ஆகியவை ஆடம்பரப் பொருட்களாக கருதப்பட்டு இருந்தன. இப்போது அவை மனிதனின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்டது.

தற்சமயம் மோட்டார்சைக்கிள் அல்லது கார் வாங்கினால் முதலில் அதற்கான இன்சூரன்ஸ் பெற வேண்டும். ஒருவர் தன் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்வதும். செய்யாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் வாகனங்களுக்கு இன்சூர் செய்வது சட்டப்படி கட்டாயம் ஆகும்.

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி இருவகைப்படும். காம்பிரிஹென்சிவ் பாலிசி, மூன்றாம் நபர் பாலிசி. காம்பிரிஹென்சிவ் பாலிசி என்பது பல்வேறு பாதுகாப்புகளை உள்ளடக்கியது. 



பாலிசி எடுத்தவரின் பாதுகாப்பு, உடன் செல்பவரின் பாதுகாப்பு, மூன்றாம் நபர் இன்சூரன்ஸ், வண்டிக்கு சேதம் அடைந்தால், அதற்கான நிவாரணம், வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ, குளிர்சாதன வசதிக்கான கருவிகள் போன்ற கூடுதல் பிட்டிங்குகள் காணாமல் போனாலோ அல்லது வண்டியே காணாமல் போனாலோ அல்லது திருட்டு போய்விட்டாலோ அதற்கான நிவாரணம், இப்படி பல்வேறு சூழ்நிலைகளிலும், விபத்துகளிலும் காப்பீட்டு பாதுகாப்பு கிடைப்பதற்கு இந்த விரிவான பாலிசி வழி செய்கிறது.

மூன்றாம் நபர் பாலிசி என்பது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் சட்டப்படி, கட்டாயமாக எடுத்தே தீர வேண்டிய காப்பீடு. 3-வது நபருக்கு பாதிப்பு அல்லது ஆபத்து நேரும்போது (மோட்டார் வாகனச்சட்டப்படி) நிவாரணம் அளிப்பதற்காக ஏற்பட்டது. இந்த பாலிசி ஆகும். 

ஒருவர் வாகனம் ஓட்டி செல்லும் போது, விபத்து நேரிடக்கூடும். அந்த விபத்தினால், சாலையில் சென்று கொண்டிருந்த மூன்றாம் நபர், துரதிர்ஷ்ட வசமாக உயிர் இழக்க நேரிடலாம். அல்லது ஊனம் அடையக்கூடும். அத்தகைய தருணங்களில் அந்த 3-வது நபர் அல்லது அந்த நபரை சேர்ந்தவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் சட்டப்படி நிவாரணம் கிடைக்க இந்த பாலிசி வழிவகை செய்கிறது.
Tags:    

Similar News