செய்திகள்
பாஸ்போர்ட் சேவை மையத்தை நவாஸ்கனி எம்.பி. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் - நவாஸ்கனி எம்.பி. திறந்து வைத்தார்

Published On 2019-08-27 07:19 GMT   |   Update On 2019-08-27 07:19 GMT
ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்:

மத்திய அரசின் வெளி விவகாரத் துறை அமைச்சகம், மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று காலை தொடங்கப்பட்டது.

ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார். மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் வரவேற்றார்.

விழாவில் தென் பிராந்திய தபால் துறை டைரக்டர் சோமசுந்தரம், தென்பிராந்திய அஞ்சல் துறை தலைவர் உபேந்தர் வெண்ணம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணை பாஸ்போர்ட் அலுவலர் பால்ரவீந்திரன் நன்றி கூறினார்.

ராமநாதபுரம் அஞ்சலக கண்காணிப்பாளர் மாரியப்பன்,உதவி கண்காணிப்பாளர்கள் விஜயகோமதி, ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், எஸ்.டி.கூரியர் சேர்மன் அன்சாரி, இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தின் கிளை அலுவலகமாக செயல்பட உள்ள இந்த சேவை மையத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புதிய பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம். இதற்காக ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அதிகாரிகள் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் காலை 10 மணி முதல் இந்த சேவை மையத்தில் பாஸ்போர்ட் தொடர்பான பணிகளை பொதுமக்கள் மேற் கொள்ளலாம்.

இங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு மதுரை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் போலீசாரின் விசாரணை முடிவடைந்து மதுரை அலுவலகத்தின் மூலம் நேரடியாக விண்ணப்ப தாரரின் முகவரிக்கு பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். இந்த பாஸ்போர்ட் சேவை மையம் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Tags:    

Similar News