தொழில்நுட்பம்

சீன வலைதளத்தில் லீக் ஆன ரெனோ ஸ்மார்ட்போன்

Published On 2019-03-31 09:05 GMT   |   Update On 2019-03-31 09:05 GMT
ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இம்முறை சீனாவின் அன்டுடு வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #OppoReno



சீன ஸ்மார்ட்போனின் நிறுவனமான ஒப்போ விரைவில் ரெனோ எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏப்ரல் 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ ரெனோ விவரங்கள் சீன பென்ச்மார்க்கிங் வலைதளமான அன்டுடுவின் லீக் ஆகியுள்ளது. 

அதன் படி ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படுகிறது. முன்னதாக ஸ்மார்ட்போன் கேஸ் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் புதிய ரெனோ ஸ்மார்ட்போனில் நாட்ச்லெஸ் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரியவந்தது.

அன்டுடு தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ஸ்மார்ட்போன் PCAM00 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே மாடல் நம்பர்கள் சீனாவின் TENAA வலைதளத்திலும் லீக் ஆகியிருந்தது. இதுதவிர அன்டுடு தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் 1,66,935 புள்ளிகளை ஒட்டுமொத்தமாக பெற்றிருக்கிறது. 

இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை ரெனோ ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. 



ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி 8GB RAM
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனுடன் உயர் ரக சிறப்பம்சங்கள் கொண்ட ஒப்போ ரெனோ வேரியண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், மூன்று பிரைமரி கேமராவும், 10X ஹைப்ரிட் சூம் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: AnTuTu | TENAA
Tags:    

Similar News