செய்திகள்
மம்தா பானர்ஜி

வெற்றி ஊர்வலங்கள் வேண்டாம்: 6 மணிக்கு உரையாற்றுவேன்- தொண்டர்கள் மத்தியில் மம்தா பேச்சு

Published On 2021-05-02 12:16 GMT   |   Update On 2021-05-02 12:16 GMT
வீட்டின்முன் திரண்ட தொண்டர்களிடம், வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்கள் வேண்டாம் என்றும், 6 மணிக்கு உரையாற்றுவேன் என்றும் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் திரிணாமுல் காங்கிரஸ்க்கும், பாஜனதாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. பின்னர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் முன்னணி பெற்றது.

5.30 நிலவரப்படி 215 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் திரிணாமுல் கட்சி ஆட்சியமைக்கிறது. மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

மதியத்தில் இருந்து முன்னிலைப் பெற்றாலும், மம்தா பானர்ஜி மாலை ஐந்து மணியளவில்தான் வீட்டு முன் குவிந்த மக்களின் முன்தோன்றினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது வீல் சேரில் காணப்பட்ட மம்தா இன்று நடந்து வந்தார். அப்போது ‘‘ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நம்முடைய வெற்றியை ஊர்வலங்களாக கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஊடகங்களில் மாலை 6 மணிக்கு உரையாற்றுவேன்’’ என்றார்.
Tags:    

Similar News