ஆன்மிகம்
லூர்து அன்னை

வில்லியனூர் மாதா ஆலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

Published On 2021-04-09 04:11 GMT   |   Update On 2021-04-09 04:11 GMT
வில்லியனூர் லூர்து அன்னை திருத்தல ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவும் நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டு திருப்பலிக்கு பின்னர் ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது.

வருகிற 17-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. 18-ந்தேதி ஆண்டு பெருவிழாவினை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு புதுவை- கடலூர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.

அதன்பின் மாலை 6 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து பெருவிழா ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது.

இந்த தகவலை பங்குத்தந்தை பிச்சைமுத்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News