ஆன்மிகம்
விநாயகர்

நாற்திசைகளிலும் விநாயகர்

Published On 2020-01-10 08:54 GMT   |   Update On 2020-01-10 08:54 GMT
சுசீந்திரம் கோவிலின் முதல் கணபதி மூடு கணபதியாகும். இது கருவறையின் பின்புறம் அமைந்துள்ளது. இதில் விநாயகர் வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கிறார்.
சுசீந்திரம் கோவிலின் முதல் கணபதி மூடு கணபதியாகும். இது கருவறையின் பின்புறம் அமைந்துள்ளது. இதில் விநாயகர் வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கிறார்.

கொடி மரத்தின் அருகில் அமைந்துள்ள கல் தூணில் சாட்சி விநாயகர் அமர்ந்து இருக்கிறார். இவர் கிழக்கு நோக்கி அமர்ந்து இருக் கிறார்.

நவக்கிரக மண்டபத்தின் அருகில் அமைந்துள்ள நீல கண்டவிநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவ்விநாயகர் மகாகணபதி, முக்குறுணி பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் கைகளில் சக்திதேவி அமர்ந்திருப்பதை காணலாம்.

இக்கோவிலின் கல் தூணில் விநாயகப் பெருமானை பெண் உருவில் வடித்துள்ளனர். எனவே அவர் விக்னேஷ்வரி என்று அழைக்கப்படுகிறார். இது மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

இசைத் தூண்களின் இடப்பக்கம் அமைந்துள்ள சன்னதியில் சாட்சி விநாயகர் சிலை அமைந்துள்ளது. இவ்விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்து இருக்கிறார்.

சித்திரசபையின் வலது பின்புறத்தில் வீற்றிருக்கும் விநாயகர் ஸ்ரீவல்லப விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவர் தென் திசை நோக்கி அமர்ந்து இருக்கிறார்.

சித்திரசபையின் கிழக்கு பகுதியில் கோவில் கிணற்றின் அருகே தேவேந்திர விநாயகர் கோவில் உள்ளது. இந்திரன் தன் சாபம் நீங்க தாணு மாலயனை வழிபடும்போது சிவலிங்கத்தின் அருகே வைத்து வழிபட்ட விநாயகர், தேவேந்திர விநாயகர் ஆனார் என்று கூறப்படுகிறது. இவர் கிழக்கு நோக்கி காட்சி தருகி றார்.

கோவிலின் முன் வாயிலின் வடக்கு பகுதியில் எழுந்தரு ளியுள்ள விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட விநாயகர் சன்னதி என்று அழைக்கப்படு கிறது. இந்த விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார். சேர நாட்டு மன்னராகிய பூதல வீரஉதயமார்த்தாண்ட வர்மா இக்கோவிலை கட்டு வித்ததால் அவரது பெயராலேயே இவ் விநாயகர் அழைக்கப்படுகிறார்.
Tags:    

Similar News