உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-01-13 09:25 GMT   |   Update On 2022-01-13 09:25 GMT
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 7-ந் தேதி தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு 103 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து 8-ந் தேதி 131, 9-ந் தேதி 149, 10-ந் தேதி 123, 11-ந் 242 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலில் கடந்த 6 மாதமாக இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 056 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 92 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட் டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் 30 வயது இளம்பெண் ஒருவர் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதனால் மாவட்டத்தில் கொரோ னாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  713 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 1,019 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். ஆனால் நேற்று 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது,
 
தொற்று பாதிப்பு ஏற்பட்ட இளம்பெண் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு ஏற்கனவே இணை நோய் இருந்துள்ளது. அதுவுமில்லாமல் அந்த பெண் இதுவரை தடுப்பூசி எடுத்து  கொள்ளவில்லை.

இதனால் அந்த பெண் இறக்க நேரிட்டது. எனவே இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதேப்போல் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றனர்.

Tags:    

Similar News