செய்திகள்
கங்கனா ரனாவத்

கனத்த இதயத்தோடு மும்பையை விட்டு வெளியேறுகிறேன்: கங்கனா ரனாவத்

Published On 2020-09-14 14:01 GMT   |   Update On 2020-09-14 14:01 GMT
ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பை வந்த கங்கனா ரனாவத், கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சுதாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது போதைக்கும்பல், வாரிசு போன்றவற்றை குறித்து கடுமையாக சாடினார். ஒரு கட்டத்தில் எதிர்ப்பு வர பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடன் மும்பையை ஒப்பிட்டு பேசினார்.

இதனால் கங்கனா ரனாவத்துக்கும் மராட்டிய அரசுக்கும் இடையில் வார்த்தை போர் ஏற்பட்டது. இதற்கிடையே மத்திய அரசு கங்கனா ரனாவத்துக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.

ஒருபக்கம் இப்படி செல்ல மறுபக்கம் மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடிக்கத் தொடங்கியது. இதனால் பா.ஜனதா நேரடியாக சிவசேனாவை எதிர்த்தது. பல்வேறு நெருக்கடிக்கு தள்ளப்பட்ட கங்கனா ரனாவத் மராட்டிய ஆளுநரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இன்று மும்பையில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது அவர் வசித்து வரும் மணாலிக்கு சென்றுள்ளார். செல்வதற்கு முன் ‘‘கனத்த இதயத்தோடு வெளியேறுகிறேன். எனக்கு எதிரான துஷ்பிரயோகம், எனது அலுவலகத்தை இடுக்க முயற்சி மேற்கொண்டது, என்னை சுற்றி பாதுகாப்பு போன்றவற்றை பார்க்கும்போது, நான் பயமுறுத்தப்பட்ட வகையில் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டதை மிகவும் சரியானது என்றே சொல்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News