ஆன்மிகம்
விநாயகர்

நாளை விநாயகர் சதுர்த்தி: வழிபாடு செய்ய உகந்த நேரம்

Published On 2020-08-21 11:41 GMT   |   Update On 2020-08-21 11:41 GMT
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு செய்ய உகந்த நேரம் எதுவென்று அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சுக்ல பக்க்ஷ சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் பார்வதி தேவி களிமண்ணை கொண்டு ஒரு சிலை வடித்து அதற்கு உயிர் கொடுத்தார். அவரே விநாயகர் என்றும் மூவுலகத்திலும் போற்றப்படுகிறார் .

இந்த ஆண்டு இந்த சதுர்த்தி திதி ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நாளை வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி திதி, 21 ஆகஸ்ட் 2020 நள்ளிரவு 11.02 முதல் 22 ஆகஸ்ட் 2020, இரவு 07.57 வரை உள்ளது. இருப்பினும் இந்த நாளின் சுப முகூர்த்த நேரம் 22 ஆகஸ்ட் 2020 , காலை 10.29 முதல் மதியம் 01.03 வரை உள்ளது.

விநாயகர் சிலையை வாங்கி பூஜையில் வைக்க உகந்த நேரம் மதிய நேரம். ஆகவே 22ம் தேதி காலை 10.29 முதல் மதியம் 01.03 வரை விநாயகருக்கான பூஜைகளை செய்யலாம். இந்த நேரத்தில் விநாயகர் சிலையை பக்தர்கள் வாங்கி தங்கள் இல்லத்தில் வைத்து பூஜை செய்து விநாயகரை வழிபாடு செய்யலாம்.
Tags:    

Similar News