செய்திகள்
கோப்பு படம்

பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு: நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2019-10-05 01:02 GMT   |   Update On 2019-10-05 01:02 GMT
கும்பல் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கும்பல் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில், ‘2-வது முறையாக பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் சர்வாதிகார காட்சிகள் தென்படுகின்றன. நாடு எதை நோக்கி செல்கிறது? இது குறித்து மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதற்கு எதிராக முற்போக்கான, பன்முகத்தன்மை கொண்ட, தேசியவாத அரசியல் கட்சிகள் கூட்டாக போராடவில்லை என்றால், சர்வாதிகார அடையாளங்கள், ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்கப்போகிறது’ என்று கூறினார்.

காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நாளில், கோட்சேவை வாழ்த்தும் பதிவுகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News