உள்ளூர் செய்திகள்
பூ மார்க்கெட் கோப்பு படம்

திண்டுக்கல்லில் பூக்கள் விலை அதிகரிப்பு

Published On 2022-01-12 09:01 GMT   |   Update On 2022-01-12 09:01 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை அதிகரித்து விற்பனையானது
திண்டுக்கல், ஜன:

மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் இல்லாத தாலும், கோவில் விழாக்களுக்கு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டதாலும் பூக்களின் தேவை குறைந்தது. இந்நிலையில் நாளை வைகுண்ட ஏகாதசி, போகிப்பண்டிகை மற்றும்  அடுத்தடுத்து வரும் பொங்கல் பண்டிகை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.2200 முதல் விற்பனையானது. முல்லை ரூ.1500, கனகாம்பரம் ரூ.1600, ஜாதிப்பூ ரூ.1200, செவ்வந்தி ரூ.80, சம்பங்கி ரூ.120, அரளி ரூ.350, கோழிக் கொண்டை ரூ.70, செண்டு மல்லி ரூ.40, ரோஜா ரூ.200 என விற்பனையானது.
Tags:    

Similar News