செய்திகள்
பா.ஜனதா

மே 5-ந்தேதி பா.ஜனதா நாடு தழுவிய தர்ணா போராட்டம்

Published On 2021-05-03 17:24 GMT   |   Update On 2021-05-03 17:24 GMT
மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவடைந்ததும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பா.ஜ.க.-வினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலின்போது பா.ஜனதா பாதுகாப்புப்படை ஆதரவுடனும், தேர்தல் அதிகாரிகளுடன் ஆதரவுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. எங்களை செயல்பட விடாமல் தடுக்கின்றனர் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதும், பா.ஜனதா தொண்டர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தாக்குதலை தொடங்கிவிட்டனர். இதில் பா.ஜனதாவைச் சேர்ந்த பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மம்தா பார்னஜி முதல்வராக பதவி ஏற்கும் மே 5-ந்தேதி நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த போராட்டம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நடைபெறும் தெரிவித்துள்ளது.

நாளை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தாக்குதலுக்கு உள்ளான பா.ஜனதா தொண்டர்களை பார்க்க மேற்கு வங்காளம் செல்கிறார்.
Tags:    

Similar News