செய்திகள்
என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஷமிம்

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2021-10-13 17:03 GMT   |   Update On 2021-10-13 17:03 GMT
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய உள்ளூர் தளபதியான ஷமிம், 2004இல் முதன்முதலில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதாக ஐஜி தெரிவித்தார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப்படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய கமாண்டரான ஷமிம் சோபி அகா ஷாம் சோபி கொல்லப்பட்டான். இத்தகவலை காஷ்மீர் ஐஜி விஜய் குமார் உறுதி செய்தார்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய உள்ளூர் தளபதியான ஷமிம், 2004இல் முதன்முதலில் கைது செய்யப்பட்டு பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் ஐஜி தெரிவித்தார்.
Tags:    

Similar News