செய்திகள்
பணியிட மாற்றம்

தமிழகத்தில் 5 சிறைத்துறை சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம்

Published On 2021-06-25 10:00 GMT   |   Update On 2021-06-25 10:00 GMT
புழல் மத்திய சிறை சூப்பிரண்டு செந்தில் குமார் சேலத்துக்கு மாறுதலாகி உள்ளார். கடலூர் சூப்பிரண்டு நிகிலா நாகேந்திரன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் 5 நகரங்களில் பணியாற்றி சிறைத்துறை சூப்பிரண்டுகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டாக பணியாற்றிய தமிழ்செல்வன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளா திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புழல் மத்திய சிறை சூப்பிரண்டு செந்தில் குமார் சேலத்துக்கு மாறுதலாகி உள்ளார். கடலூர் சூப்பிரண்டு நிகிலா நாகேந்திரன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் சிறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News