ஆன்மிகம்
துலுக்க சூடாமணி அம்மன்

துலுக்க சூடாமணி அம்மன் கோவில் தேர்த்திருவிழா ரத்து

Published On 2021-04-06 02:09 GMT   |   Update On 2021-04-06 02:09 GMT
துலுக்க சூடாமணி அம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்தது. பாதுகாப்பு மற்றும் இதர காரணங்கள் கருதி தேர்த்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இந்த கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்தது.

இந்தநிலையில் தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே பாதுகாப்பு மற்றும் இதர காரணங்கள் கருதி தேர்த்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவிலில் இருந்து சூடாமணி அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு தேர்த்திருவிழாவை காண வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News