ஆன்மிகம்
கிளுவா நத்தம் நித்திய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஊஞ்சல் தாலாட்டு

கிளுவா நத்தம் நித்திய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஊஞ்சல் தாலாட்டு

Published On 2020-10-07 06:02 GMT   |   Update On 2020-10-07 06:02 GMT
கிளுவா நத்தம் நித்திய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீதேவி பூதேவி நித்திய கல்யாண பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.
சேத்துப்பட்டை அடுத்த கிளுவா நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் 5-வது நாள் நிகழ்ச்சியில் ஊஞ்சல் தாலாட்டும், தங்கரதத்தில் ஊர்வலமும் நடந்தது. இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நித்திய கல்யாண பெருமாள் மூலவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டது.

இரவு 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி நித்திய கல்யாண பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை வைத்து தாலாட்டில் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் தங்கரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் உற்சவரை வைத்து தெருக்களில் முக்கிய இடங்களில் ரதம் சென்று வந்தது. விழாவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் முக கவசம் அணிந்து நீண்ட இடைவெளி விட்டு வணங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News