செய்திகள்
கைது

அருப்புக்கோட்டையில் ரே‌ஷன் அரிசி பதுக்கியவர் கைது

Published On 2019-11-04 07:18 GMT   |   Update On 2019-11-04 07:18 GMT
அருப்புக்கோட்டையில் ரே‌ஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ ரே‌ஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்:

அருப்புக்கோட்டை வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் பொன்னுக்குமார் (வயது58). இவர் வீட்டில் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ ரே‌ஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொன்னுக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் செம்பட்டி பகுதி ரேசன் கடைகளில் இலவச அரிசியை கிலோ ரூ.5-க்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது. மேலும் ரே‌ஷன் குருணை அரிசியை மாட்டுத் தீவனத்திற்கும் விற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து பொன்னுக்குமாரிடம் இலவச அரிசி கார்டை வழங்கியவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களுக்கான இலவச அரிசியை ரத்து செய்ய வேண்டும் என்று வட்ட வழங்கல் அலுவலருக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.
Tags:    

Similar News