லைஃப்ஸ்டைல்
விபரீதகரணி

எல்லா நோய்க்கும் அருமருந்தாகும் இந்த ஆசனம்

Published On 2020-01-09 03:08 GMT   |   Update On 2020-01-09 03:08 GMT
யோகக்கலையில் உடல்பிணி அனைத்தையும் நீக்கும் ஒரு ஆசனம் உள்ளது. அதுதான் விபரீதகரணி என்ற ஆசனமாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
ஆயுர்வேதம், சித்தாவில் பொதுவாக சர்வரோக நிவாரணி என்று ஒரு மருந்து சொல்வார்கள். இதனை சாப்பிட்டால் எல்லா வியாதியும் நீங்கும் என்பார்கள்.
அது போல் யோகக்கலையில் உடல்பிணி அனைத்தையும் நீக்கும் ஒரு ஆசனம் உள்ளது. அதுதான் விபரீதகரணி என்ற ஆசனமாகும். இந்த ஆசனத்தில் நுரையீரல் தலைகீழாக இருக்கும். அதானால் அதிலுள்ள அசுத்த காற்றுகள் உடன் வெளியேறும்.

முதுகுத்தண்டின் மையத்திலுள்ள ஒருவிதத் திரவம் இந்த ஆசனத்தால் அதிக வேகமடைகிறது. அதனால் சிம்பதடிக் நரம்புகளும், வேகஸ் நரம்புகளும் சுறுசுறுப்படைகின்றன. தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பிகள் இந்த ஆசனத்தின் மூலம் சிறப்பாக இயங்குகிறது. தலைகீழாக நிற்கும் சிரசாசனம் செய்வது கடினம். ஆனால் பலன்கள் அதிகம். அனைவரும் சிரசாசனம் செய்யக் கூடாது. உடல் தன்மை அறிந்து, யோகவல்லுநரின் நேரடி பார்வையில் தான் செய்ய வேண்டும். ஆனால் இந்த விபாறிதக் கரணி ஆசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யாலாம். சிரசாசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன்கள் அனைத்தும் இந்த விபரீதகரணி ஆசனத்தில் கிடைக்கின்றது.

பெண்களுக்கு ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் நீக்குகின்றது. கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சினை, குழந்தை பிறந்த பின் நீரிழிவு, உடல் பருமனாதல் முதலியவற்றைப் போக்குகின்றது. மேலும் முகப்பொலிவுடன் இளமையுடன் வாழ வழிவகை செய்கின்றது. சுகப்பிரசவம் உண்டாக்கும் சுகமான யோகா இந்த விபரீதகரணி.

செய்முறை

* தரையில் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை அடுக்கி வைக்கவும்.
* தலையணையின் மீது மையத்தில் அமராமல் முன்பகுதி நுனிக்கும், மையப்பகுதியின் இடையில் அமரவும்.
* சாதாரண மூச்சில் மெதுவாக பின்னால் வளைந்து கைகளை தரையில் ஊன்றிப் படுத்து உச்சந்தலையை தரையில் வைக்கவும்.
* இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து மெதுவாக மேலே உயர்த்தவும்
* கால்களை 90- டிகிரிக்கு நீட்டி கொண்டு வரவும். உடல் கனம் முழுவதும் தோள்பட்டை கழுத்தில் இருக்கும் படி வைக்கவும். இருகைகளையும் தலையணைக்குப் பக்கத்தில் வைக்கவும்.
* சாதாரண மூச்சில் 5 நிமிடங்கள் இருக்கவும். பின்பு மெதுவாக கால்களை கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும்.
* பின் கைகளின் உதவியால் மெதுவாக தலையணையை எடுத்துவிட்டு சாந்தி ஆசனத்தில் இரு நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.

தலையாணையை வெளியே எடுக்கும் முறை

கால் விரல்களை ஊன்றி குதிகாலை உயர்த்தி திரும்பவும் கால் விரல்களை ஊன்றி முதுகை உயர்த்தவும். அப்போது தலையணைகளை ஒன்றின் பின் ஒன்றாக பக்கவாட்டில் பிடித்து எடுத்துப்போட வேண்டும். அவசரப்டாமல் நிதானமாக பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் 5 நிமிடம் பயிற்சி செய்யுங்கள். பின் மூன்றாவது மாதத்தில் 10 நிமிடங்கள் இதில் இருக்க முயற்சிக்கவும். கணவன்-மனைவி உறவு கொண்ட மறுநாள் இவ்வாசனத்தை செய்தால் உடல் பலவீனம், அசதி தெரியாது. சுறுசுறுப்பாக திகழ முடியும்.

தூக்கம் வராதவர்கள் ஏக்கம் தீர

இரவில் சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் பத்து நிமிடங்கள் விபரீதகரணி செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து சாப்பிடுங்கள். படுக்கும் பொழுது ஒரு டம்ளர் சூடாக தண்ணீர் குடித்துவிட்டு படுக்கவும். நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

ஆஸ்துமாவிற்கு அருமையான ஆசனம்


ஆஸ்துமா நோயாளிகள் இந்த ஆசனத்தை முறையாகப் பயில்வதன் மூலம் முழுமையான பலன்களை அடையாலாம். நுரையீரல் சுத்தமடையும். நுரையீரலைச் சுற்றியள்ள சளி தானாக வெளியேறும். மூக்கடைப்பு, மூச்சுவிடுதலில் உள்ள சிரமம் நீங்கும். உடல் எடை அதிகமுள்ளவர்கள் இந்த ஆசனத்தின் மூலம் விரைவில் உடல் எடை குறையும்.

டான்ஸில் நீங்கும்

மூக்கினுள் சில நேரங்களில் சதை வளரும். தொண்டையில் எச்சில் முழுங்கும் பொழுது வலி ஏற்படும். தொண்டையில் இருபுறமும் டான்ஸில் என்னும் இரு கிரந்திகள் உள்ளன. சில நேரங்களில் இவை நமது உடலைப் பாதுகாக்க பருமனாகிவிடும். நாம் உடனே ஆங்கில மருத்துவரிடம் சென்றால் டான்ஸில் ஆப்ரேஷன் செய்துவிடுவர். தேவையில்லை. விபாறிதக் கரணி செய்யுங்கள் டான்ஸில் சரியாகிவிடும்.

நரை- திரை நீக்கும் ஆசனம்

இவ்வாசனத்தால் உடலிலுள்ள எல்லாச் சுரப்பிகளும் சிறப்பாக இயங்குகின்றது. தலைமுடி நரைக்காமல் இருக்கும். கண்களில் வயதானால் காட்ராக்ட் மறைப்பு ஏற்படாது. எனவே தான் இது நரை (வெள்ளை முடி) திரை (கண்களில் மறைப்பு) நீக்கும் ஆசனம் என்று கூறுகின்றோம். கட்டி, முகப்பரு, முகத்தில் சுருக்கங்கள் நீக்கவல்லது இவ்வாசனம். நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். தலைசுற்றல், தலைவலி நீங்கும். பெண்களுக்கு கருப்பை ஏறுதல் இறங்கும் நிலையை சரி செய்கின்றது.
Tags:    

Similar News