செய்திகள்
தங்கம்

இறக்குமதி வரி அதிகரிப்பு எதிரொலி- தங்கத்தின் விலை கிராமுக்கு 59 ரூபாய் உயர்வு

Published On 2019-07-05 11:26 GMT   |   Update On 2019-07-05 11:26 GMT
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் கிராமுக்கு 59 ரூபாய் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் கிராமுக்கு 59 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

டெல்லி நிலவரப்படி 99.9 தரத்திலான ஆபரணத் தங்கம் ரூ.3480 ஆகவும் 99.5 தரத்திலான ஆபரணத் தங்கம் ரூ.3463 ஆகவும் விற்கப்படுகிறது. 8 கிராம் தங்க நாணயத்தின் விலையும் 200 ரூபாய் உயர்வுடன் 27 ஆயிரம் ரூபாயாக உள்ளது.


உலகளாவிய அளவில் தங்கத்தின் விலை நிலையாக இருந்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகர தங்கச்சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1,413 டாலர்கள் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் உயர்த்தப்பட்ட இறக்குமதி வரியால் இங்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News