இந்தியா
மத்திய அரசு

குடியரசு தின கொண்டாட்டம் ஜனவரி 23-ந்தேதியில் இருந்து தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2022-01-15 10:10 GMT   |   Update On 2022-01-15 10:10 GMT
இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் தேதி மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி கொண்டாப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டம் ஜனவரி 24-ந் தேதி முதல் தொடங்கும்.

தலைநகர் டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி கோலாகலமாக குடியரசு தின விழா நடைபெறும். இதில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் தேதி மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 24-ந் தேதிக்கு பதிலாக ஒரு நாள் முன்பு ஜனவரி 23-ந்தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளாகும். அவரது பிறந்த நாளையும் சேர்த்து கொண்டாடும் வகையில் சுதந்திர தின கொண்டாட்டம் தேதியை ஒரு நாள் முன்னதாக மாற்றி அமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.


Tags:    

Similar News