செய்திகள்
வாக்கி எண்ணிக்கை

குஜராத்: சூரத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் ஜீரோ, ஆம் ஆத்மி 27

Published On 2021-02-23 12:31 GMT   |   Update On 2021-02-23 12:31 GMT
குஜராத் மாநில மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது. சூரத் மாநகராட்சியில் ஒரு இடம் கூட பெறவில்லை.
குஜராத் மாநிலத்தில் தற்போது பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாகும். இங்கு 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதாவது அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய மாநகராட்சிகளில் 576 வார்டுகளுக்கு தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மாநகராட்சிகளிலும் பா.ஜனதா முன்னிலை வகித்தது.

120 வார்டுகள் கொண்ட சூரத் மாநகராட்சியில் பா.ஜனதா தொடக்கத்தில் இருந்தே முதலிடம் வகித்தது. காங்கிரஸ் சுமார் 10 இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி 3-வது இடத்தில் இருந்தது.

ஆனால் நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் பின்தங்க ஆரம்பித்தது. இறுதியில் பா.ஜனதா 93 இடங்களில் வெற்றி பெற்றது. அதேவேளையில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களை பிடித்து காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்தது. காங்கிரஸ் கட்சியால் ஒரு வார்டை கூட முடிக்க முடியாமல் போனது.

ராஜ்கோட் மாநகராட்சியில் பா.ஜனதா 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற நான்கு மாநகராட்சியிலும் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Tags:    

Similar News