செய்திகள்
கொரோனா பரிசோதனை

நேற்றைவிட அதிகரிப்பு- தமிழகத்தில் இன்று 1631 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-09-10 14:23 GMT   |   Update On 2021-09-10 14:23 GMT
கோவை மாவட்டத்தில் நேற்று 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 235 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், தற்போது சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று 1596 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று 1600ஐ தாண்டி உள்ளது. இன்று ஒரே நாளில் 1631 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உயிரிழப்பும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று 21 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இன்று 25 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1523 பேர் குணமடைந்தனர். இதன்மூலம், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,79,169 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16304 ஆக உயர்ந்துள்ளது.

தினசரி பாதிப்பு அதிகபட்சமாக கோவையில் பதிவாகி உள்ளது. கோவையில் நேற்று 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்து, 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நேற்று 108 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 133 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோட்டில் 130 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு, இன்று 137 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரிலும் தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று 87 ஆக இருந்த பாதிப்பு தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News