செய்திகள்
மழை

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2020-11-28 09:28 GMT   |   Update On 2020-11-28 09:28 GMT
சேலம் மாநகரை பொறுத்தவரையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சேலம்:

நிவர் புயலையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதேபோல் சேலம் மாவட்டத்திலும் மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சேலம் மாநகரை பொறுத்தவரையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்தநிலையில் நேற்று மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, சேலம் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

எடப்பாடி-2.2., வாழப்பாடி-1, சேலம்-3, பெத்தநாயக்கன்பாளையம்-7, மேட்டூர்-5.4, சங்ககிரி-5.4, ஆணைமடுவு-10, கரியகோவில்-10, ஆத்தூர்-4.4.
Tags:    

Similar News