ஆட்டோமொபைல்
ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ

ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்

Published On 2020-06-16 12:04 GMT   |   Update On 2020-06-16 12:04 GMT
ஆம்பியர் வெஹிகில்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



ஆம்பியர் வெஹிகில்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், மேக்னஸ் ப்ரோ எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 

புதிய ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 73990, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டர் அதிக அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ ஸ்கூட்டர் வரும் மாதங்களில் மற்ற நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60 வாட், 30ஏஹெச் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 1.2 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய மேக்னஸ் ப்ரோ 60 வாட் சார்ஜருடன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆகும் என ஆம்பியர் வெஹிகில்ஸ் தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News