பைக்
இன்ஃபினிட்டி இ1

ரூ.45,000 விலையில் வெளியாகும் மின் ஸ்கூட்டர்- இன்று முதல் டெஸ்ட் டிரைவ் செய்யலாம்

Published On 2022-02-28 10:22 GMT   |   Update On 2022-02-28 10:22 GMT
பவுன்ஸ் நிறுவனம் வழங்கும் பேட்டரி சந்தா சேவை மற்ற மின்சார ஸ்கூட்டர்களை விட 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ்வை இன்று முதல் தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் இன்ஃபினிட்டி ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ் கிடைக்கிறது.

இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனமாக அறிமுகமாகிய பவுன்ஸ் நிறுவனம் தற்போது மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் நிலையில் புது இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரை பவுன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து இன்று முதல் அந்த ஸ்கூட்டருக்கான டெஸ்ட் டிரைவ் தொடங்கப்பட்டுள்ளது.



இந்த ஸ்கூட்டர் ரூ.45,000 எக்ஸ் ஷோரும் விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரில் 2kWh பேட்டரியும், 2,2KW மோட்டாரும் இடம்பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 65 கி.மீ உட்சபட்ச வேகம் செல்லும் இந்த ஸ்கூட்டர், 85 கி.மீ வேகத்தை கொண்டுள்ளது. 

பவுன்ஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டருக்கு பேட்டரி சந்தா முறையையும் வழங்குகிறது. இதன்மூலம் பேட்டரி சார்ஜ் முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் பேட்டரி மையங்களுக்கு சென்று புதிய பேட்டரிக்களை மாற்றிகொள்ளலாம். இதனால் நிரந்தரமாக பேட்டரி வைத்துக்கொண்டு மெயிண்டைனன்ஸ் குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இதுமட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் முடிந்தவுடன் அதிகம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டும் என அவசியமில்லை. சந்தா முறையில் புதிய பேட்டரிகளை வாங்கிகொள்ளலாம். இதன்மூலம் 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News