ஆட்டோமொபைல்

இந்தியாவில் ரெனால்ட் க்விட் விலை மாற்றம்

Published On 2019-03-26 03:45 GMT   |   Update On 2019-03-26 03:10 GMT
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரின் விலை மாற்ற இருக்கிறது. #RenaultKwid



ரெனால்ட் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலான க்விட் காரின் இந்திய விலையை அதிகரிக்க இருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவில் ரெனால்ட் க்விட் கார் விலை ஏப்ரல் 2019 முதல் தற்சமயம் இருப்பதில் இருந்து சுமார் 3 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக க்விட் இருக்கிறது.

சமீபத்தில் ரெனால்ட் தனது மேம்பட்ட 2019 க்விட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட 2019 ரெனால்ட் க்விச் காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு கூடுதல் அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், க்விட் காரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.



இந்தியாவில் மேம்பட்ட ரெனால்ட் க்விட் பேஸ் வேரியண்ட் விலை ரூ.2.66 லட்சம் என்றும் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.4.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 க்விட் மாடல் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய விலை மாற்றத்தின் படி ரெனால்ட் க்வ்ட் ஹேட்ச்பேக் காரின் பேஸ் வேரியண்ட் விலையில் ரூ.9000 மற்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.12,000 வரை அதிகமாகும். ஏப்ரல் 2019 முதல் புதிய விலை அமலாகிறது. அந்த வகையில் புதிய க்விட் பேஸ் வேரியண்ட் ரூ.2.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News