செய்திகள்
அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்.

அ.தி.மு.க., டிஜிட்டல் பேனர்களை போலீசார் அகற்றியதால் பரபரப்பு

Published On 2021-06-18 08:06 GMT   |   Update On 2021-06-18 08:06 GMT
டிஜிட்டல் பேனர்கள் வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என தி.மு.க., தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பெரியதோட்டம், செல்லாண்டியம்மன் துறை உள்ளிட்ட 5 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

அதில் இஸ்லாமிய மக்களுக்காக நாச்சிபாளையத்தில் கபர்ஸ்தான் அமைக்க 95 சென்ட் இடம் வழங்கி உத்தரவிட்ட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வாசகங்கள் இடம்பெற்று இருந்தது.

இந்தநிலையில் இன்று திருப்பூர் பெரியபள்ளிவாசலில் தி.மு.க., எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தலைமையில் கபர்ஸ்தானுக்கு இடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் டிஜிட்டல் பேனர்கள்  வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என தி.மு.க., தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் வந்து அந்த பேனர்களை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News